2025-ல் இணையப்போகும் தனுஷ் ஐஸ்வர்யா.. ரஜினி போட்ட பலே ஸ்கெட்ச்

2022 கோலிவுட் சூப்பர் தம்பதியினரான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்தி மொத்த கோடம்பாக்கத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவதாக கூறப்பட்டது.

தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இருவரும் 2004 திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்பொழுது ஒற்றுமையாக இல்லை. அவரவர் வேலையில் பிஸியாக இருக்கின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்குவதிலும், தனுஷ் நடிப்பிலும் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் இருவரும் மகன்களுக்காக அடிக்கடி சந்தித்து கொள்கிறார்கள் என்ற செய்தியும் வெளிவந்தது. இது ரசிகர்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

ரஜினி போட்ட பலே ஸ்கெட்ச்

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிப்பதும். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பாராட்டிக்கொள்வதுமாய் இருந்து வருகின்றனர். இப்பொழுது குழந்தைகளுக்காக இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழப் போவதாக ஒரு முடிவில் இருக்கின்றன ராம்.

மேலும் 2025 ஆம் ஆண்டு ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை தொட்டுவிட்டார். இதனை கொண்டாடும் விதமாக ஒரு விழா நடக்கப் போகிறதாம். அதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொள்கிறார்களாம். அது மட்டுமின்றி ரஜினி, இருவரும் சேர்ந்து வாழ இதுதான் சந்தர்ப்பம், தன்னுடைய ஐம்பதாவது ஆண்டு விழாவை ஒட்டி எதிர்பார்ப்பதும் அதுதான் என மகளிடம் கூறிவிட்டாராம்.

- Advertisement -spot_img

Trending News