போட்டிகள் இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக்கூடாது, இதுதான் தெரிந்தவர்கள் இடையே உள்ள ஒரு நல்ல வியாபாரம். யாராக இருந்தாலும் உண்மையாக வேலை செய்து அவர்கள் வெற்றியடைய நினைப்பார்கள். அந்த உழைப்பிற்கு கிடைக்கும் வெற்றி மிக அற்புதமானது. அதற்கு தடையாக மற்ற எந்த விஷயங்கள் நடந்தாலும் ஒற்றுமையுடன் போட்டியாக கருதி மட்டுமே வெற்றி பெற வேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 மற்றும் பேட்ட என இரண்டு படங்கள் வெளிவர உள்ளது. இந்த இரண்டு படத்தையும் சன் பிக்சர்ஸ் மற்றும் லைகா தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2.0 மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் அடுத்த 45 நாட்களில் அடுத்த படம் ரிலீஸ் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேட்ட படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  தல 57 படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

ஆனால் ரஜினி எதிர்பார்த்தது அஜித்துடன் போட்டி போட்டால் நன்றாகத்தான் இருக்கும் என்றுதான். ஆனால் தயாரிப்பாளர் கொஞ்சம் பயப்படுகிறார். ஏனென்றால் இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் அல்ல.

இது ஒரு புறமிருக்க வரும் பொங்கல் அன்று தல அஜித்தின் விஸ்வாசம் படம் வெளிவர உள்ளது என்பது அனைவரும் தெரிந்தது. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் வெளியிடுவதால் படம் தள்ளிப் போய் இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் இருவருக்கும் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் போட்டியாகும்.

அதிகம் படித்தவை:  அமெரிக்க வெள்ளை மாளிகையில் அஜித்!! ஆச்சர்ய தகவல்

இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் 2.O படம் அதிக பட்ஜெட் அதனால் கொஞ்சம் நாட்கள் ஓடினால் மட்டுமே அதில் பணத்தை எடுக்க முடியும். அதனால் கூட இந்த முடிவுகள் இருக்கலாம். இருந்தாலும் இந்த போட்டிகள் அடுத்து தொடர வேண்டும்.