Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த விஜய்யின் தெறி பட நடிகர்.!
ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் மிக பிஸியாக நடித்து வருகிறார், இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் நிறுவனம், இந்த நிலையில் படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், சசிகுமார் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்து வருகிறது.

super star rajni
இந்த நிலையில் அண்மையில் வெளியாகிய பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
மேலும் இந்த படத்தில் போதும் போதும் என்ற அளவுக்கு நடிகர்கள் இணைந்துள்ளார்கள் இந்த நிலையில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, விஜய்யின் தெறி படத்தில் நடித்த மகேந்திரன் ரஜினி படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் தற்போது கசிந்துள்ளது. இது உண்மையான தகவல்களா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
