Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்.!
ரஜினி காலா படத்தில் இருந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் சசிகுமார் இணைந்துள்ளதாக நமது இணையதளத்தில் அறிவித்திருந்தோம், இந்த நிலையில் தற்பொழுது பேட்ட படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது,
ஏற்கனவே வெளியாகிய பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு பெற்று வைரலாகி வந்தது, அது மட்டுமே இல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிற வைத்தது இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
#PettaSecondLook@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @DOP_Tirru @sureshsrajan @PeterHeinOffl @vivekharshan @VijaySethuOffl @Nawazuddin_S @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/60Td9XWPmS
— Sun Pictures (@sunpictures) October 4, 2018
