Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

25 வருடத்திற்கு முன்னாடி ரஜினிகாந்த் செய்த சாதனையை தொட முடியாமல் தடுமாறும் இந்திய நடிகர்கள்.. தலைவர் வேற ரகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரில் என்ன காந்த சக்தி இருக்கிறது என்றே தெரியவில்லை. கடல் கடந்து அவருக்கு ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். மொழி தெரியாதவர்கள் கூட ரஜினியின் அங்க அசைவுகளை பார்த்து ரசித்த காலங்களும் இருக்கிறது.

வயசானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் வசூல்கள் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜப்பானில் 25 வருடத்திற்கு முன்னர் செய்த சாதனையை தற்போது உள்ள படங்கள் அதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாமல் தடுமாறுவது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற திரைப்படம் முத்து. ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்த படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்திய அளவில் பெரிய வரவேற்ப்பை பெற்ற இந்த படத்தை ஜப்பானிலும் வெளியிட்டனர். அதுவரை இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த் உலக அளவில் சூப்பர் ஸ்டாராக மாறும் அளவுக்கு வசூல் வேட்டை ஆடியது முத்து படம்.

ஜப்பானில் இதுவரை வெளியான இந்திய படங்களில் 450 மில்லியன் யென் வசூலைக் குவித்து முதலிடத்தில் இருப்பது முத்து படம் தான். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பாகுபலி-2(275M), 3 இடியட்ஸ்(149M), இங்கிலீஷ் விங்கிலிஷ்(146M), சாஹோ(100M) போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.

பெரிய அளவு பணமதிப்பு புழங்காத அந்த காலகட்டத்தில் செய்த சாதனையை இந்த காலகட்டத்தில் முறியடிக்க முடியாமல் தடுமாறுவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. தலைவர் எப்பவுமே வேற ரகம்தான்.

Continue Reading
To Top