ரஜினியை கைவிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்.. நஷ்டத்தை ஈடுகட்ட உள்ளே வந்த பிரபல தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் கூட சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

விரைவில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய உடல்நிலையை பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்தை முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படத்தை இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ரஜினியின் சம்பளம் நூறு கோடி உடன் சேர்த்து படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டியது இப்போது இருக்கும் நிலைமைக்கு இவ்வளவு பட்ஜெட்டில் படமெடுக்க முடியாது என கைவிட்டுவிட்டதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

இதனால் அப்செட்டான ரஜினிகாந்த் உடனடியாக லைகா நிறுவனத்தின் கதவை தட்டியுள்ளார். அவர்களும் இதுதான் சான்ஸ் என தர்பார் படத்தில் ஏற்பட்ட சில நஷ்டங்களை ஈடுகட்ட ரஜினியின் அடுத்த படத்திற்கு ஓகே சொல்லி அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக கூறுகின்றனர்.

இதுவரை லைகா நிறுவனம் ரஜினியை வைத்து எடுத்த 2. O, தர்பார் போன்ற இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக ரஜினிக்கு கொஞ்சம் அடிவாங்கிய படங்கள் தான். இதனால் மொத்தத்தையும் வசூல் செய்ய வெறி கொண்டு களம் இறங்கியுள்ளதாம் லைகா.

rajini-desingh-periyasamy
rajini-desingh-periyasamy
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்