Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் அடுத்த படத்தில் ஜோடி சேரும் எவர்கிரீன் நாயகி.. அய்யோ வேண்டாம் என அலறும் ரசிகர்கள்
தற்பொழுது இந்திய சினிமா உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் தான். இந்த படத்தில் இருந்து நேற்று வெளியான சும்மா கிழி என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து. ஏ.ஆர். முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இந்த படத்தை வீரம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். படத்தின் முக்கிய காமெடியனாக சூரி கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நீண்ட நாட்களுக்கு முன்பு நடித்த குஷ்பு நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் நடிகை மீனாவை பரிந்துரை செய்து வருகின்றனர். குஷ்புவை விட தலைவர் ரஜினிகாந்துக்கு மீனா தான் சிறந்த எவர்கிரீன் ஜோடி என இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ரசிகர்கள் இமான் மற்றும் சூரி படத்தில் இணைந்ததால் சற்று வருத்தத்தில் உள்ளனர். இதில் குஷ்பு என்றவுடன் தலையை தொங்கப் போட்டு விட்டார்கள் தலைவர் ரசிகர்கள்.
