எப்படியாச்சும் ஹிட் கொடுக்கனும்.. இளம் இயக்குனரை தூக்கிய ரஜினி

தனக்கென தனி ஸ்டைல் மற்றும் நடை மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிக்க தொடங்கிய ஆரம்பம் முதல் தற்போது வரை ரஜினிக்கான ரசிகர் பட்டாளம் குறையவே இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

ஆனால் சமீபகாலமாக ரஜினியின் படங்கள் சரியாக ஓடவில்லை. வயது முதிர்ச்சி காரணமாக அவரது படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லையா அல்லது கதை நன்றாக இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான தர்பார், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன.

இதில் ரஜினி அண்ணாத்த படத்தை பெரிதும் நம்பினார். எப்படியும் படம் வெற்றி பெற்று விடும் மீண்டும் பழைய பார்முக்கு வந்துவிடலாம் என நினைத்தார். படம் என்னமோ 200 கோடிக்கு மேல் வசூல் பெற்று விட்டது. ஆனால் ரசிகர்கள் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்தை பெரிதும் விரும்பவில்லை.

ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்து போன பாசமலர்கள், கிழக்குச் சீமையிலே போன்ற படங்களை போலவே அண்ணாத்த படமும் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து உருவாகியுள்ளது. இதில் புதிதாக எதுவும் இல்லை என்பதால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. எனவே ரஜினி எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்.

சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ரஜினி தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இருப்பினும் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ரஜினி தீவிரமாக இறங்கி உள்ளாராம். அதிலும் ரஜினி குடும்பத்தினர் அவரது நடிப்பை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளார்களாம்.

அந்த வகையில் ரஜினியை சந்தித்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறிய கதை அவ்வளவு சுவாரசியமாக இல்லையாம். நெல்சனும் தற்போது பீஸ்ட் படத்தில் பிசியாக இருப்பதால், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளாராம். இந்த படமாவது ஹிட் ஆகவேண்டும் என பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் ரஜினி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்