சூப்பர்ஸ்டார் ரஜினி கபாலி என்ற பிரமாண்ட வெற்றி படத்தை தொடர்ந்து தற்பொழுது காலா மற்றும் 2.௦ படத்தில் நடித்து முடித்துள்ளார், இதில் காலா டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது அதுமட்டும் இல்லாமல் படத்தின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

2.௦ படத்தில் அதிக கிராபிக்ஸ் இருப்பதால் படம் தள்ளி போகிறது என கூறுகிறார்கள், மேலும்ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் ஆம் ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திக்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என கூறுகிறார்கள் மேலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க 4 நடிகைகள் பெயர்கள் பட்டியலில் இருக்கிறது அவர்கள் தீபிகா படுகோன்,த்ரிஷா, அஞ்சலி மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆகியோர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள்.

படத்தின் பிரீ புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது, படத்திற்காக சூப்பர்ஸ்டார் ரஜினி 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள், விரைவில் படத்தில் நடிக்கும் இதர நடிகைகள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.