சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் ரிலிஸில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் 14 வருடங்களுக்கு முன் இவர் கர்நாடகா அரசை கண்டித்து காவேரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போது கவர்னரை சந்தித்து நதிநீர் இணைப்பிற்காக நான் ரூ 1 கோடி பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், இன்று வரை அந்த பணத்தை அவர் தரவில்லை.அதனால், ரஜினி ஒரு மாதத்திற்குள் இந்த பணத்தை தரவேண்டும், அப்படி தரவில்லை என்றால் அவர் வீட்டின் முன்பு போராட்டம் செய்வோம் என விவசாயிகள் கூறியுள்ளனர்.