RajiniMurugan-First Day-Collectionபொங்கலுக்கு வெளிவந்த ரஜினிமுருகன் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் தமிழகத்தின் வசூல் ரூ 30 கோடியை தாண்டிவிட்டது.இந்நிலையில் இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட நிறுவனம் கூறுகையில் ‘ரஜினிமுருகன் இங்கு 1 லட்சம் டாலருக்கு மேல் வசூல் செய்து விட்டது.இதுநாள் வரை வந்த சிவகார்த்திகேயன் படங்களில் இது தான் அதிகம்’ என கூறியுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ 50 கோடி வசூலை நெருங்கவிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.