Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி, முருகதாஸ் படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்.. மரண தீம் மியூசிக் உண்டு

ரஜினி முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது இசையில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வரிசையில் கமலஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு இசையமைத்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸின் நெருங்கிய நண்பரான ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது இவரது படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் ஹாரிஸ் ஜெயராஜ் உற்சாகத்தில் உள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் படமான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இவர்களில் யாராவது ஒருவர் தான் இசையமைப்பார் என கருதப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பு தற்போது ஹாரிஸ் ஜெயராஜுக்கு போயுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழில் உள்ள மூன்று பெரிய நடிகர்களுக்கும் நான் இசையமைத்துள்ளேன் எனவும் நான் எப்போது ரஜினிக்கு இசையமைக்க போகிறேன் என்று தெரியவில்லை என கூறினார்.
ஆனால் தற்போது இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. அதனால் உற்சாகத்தில் தற்போது உள்ளார். இதைப்பற்றி இன்னும் உறுதிபட படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை ஆனால் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ரஜினிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம் .
