fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப்.! ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.?

rajini

News | செய்திகள்

சூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப்.! ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.?

ரஜினி தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களுக்கு ஒரு புதுவித கொண்டாட்டத்தை கொடுத்து வருகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினி கடைசியாக நடித்த படம் பேட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

பேட்ட படத்தில் பழைய ரஜினியை பார்த்ததால் மிகவும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருந்தார்கள் ரசிகர்கள்,  இந்த நிலையில் தற்போது ரஜினி ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த கூட்டணி பற்றி தகவல் வெளியானாலும் இன்னும் படப்பிடிப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை ஆனால் தற்போது படத்தில் சூப்பர் ஸ்டார் என்ன கெட்டப் என்பது லீக் ஆகியுள்ளது.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார், அந்த போலீஸ் கெட்டப் மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் கெட்டப்பில் இருக்குமென கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது இந்த படத்தில் ஒரு பாதி படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top