Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொலைக்காட்சியில் புள்ளபூச்சி நடிகர்களிடம் அடிவாங்கும் ரஜினிகாந்த்.. சினிமாவை விட்டு ஒதுங்க நேரம் வந்துவிட்டதா?
ஒரு மனிதன் ஒரு தொழிலில் 40 ஆண்டுகாலம் நம்பர்-ஒன் ஆக இருக்க முடியுமா என யோசித்து கூட பார்க்க முடியாத விஷயத்தை அசால்டாக செய்து முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தான் ஹீரோவாக வெற்றி பெற ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நம்பர் ஒன் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார் என்பதுதான் முக்கியமானது.
கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்கு 104 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் சம்பளத்தில் சிறிது குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக ரஜினிகாந்தின் படங்கள் தொலைக் காட்சிகளில் ரசிகர்களின் வரவேற்ப்பை பெற தவறி வருகிறது. பெரும்பாலும் ரஜினியின் புதிய படங்கள் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்து வருகிறது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மிகச்சிறிய மார்க்கெட்டை கொண்ட அறியப்படும் நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனியின் தோல்வி படத்துடன் மோதி ஒரு குறிப்பிட்ட டிஆர்பியை பெற தவறியுள்ளது ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தர்பார்.
இதுவரை சன் டிவியில் இரண்டு முறை ஒளிபரப்பப்பட்ட உள்ள தர்பார் திரைப்படம் அந்த வாரத்தில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களை தோற்கடிக்க முடியாமல் இரண்டாவது இடத்தில் இருந்துள்ளது.
இதனால் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு ஒதுங்கி நேரம் வந்துவிட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இப்படி சொன்ன போதெல்லாம் மீண்டு வந்து மாபெரும் வரலாற்று சாதனைகளை பலமுறை படைத்துள்ளார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

darbar-trp-2nd time
