ரஜினிகாந்த் அடுத்த பட அறிவிப்பு! சூப்பர் ஸ்டாருடன் களமிறங்கும் சிம்பு.. பெரிய சம்பவம் இருக்கு

மலையாள இயக்குனர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மலையாள சினிமாவில் டோவினோ தாமஸ் நடிப்பில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 2018. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை அடுத்து, தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர் நேசனல்ஸுக்கு ஒரு படம் பண்ணுவதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சிம்பு நடிப்பதாகவும் பேசப்பட்டது. இந்த படம் பற்றி சினிமாவில் அதிகம் பேசப்பட்ட நிலையில் ரசிகர்கள் எப்போது இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், இப்படத்திற்கான பட்ஜெட் அதிகம் என்பதால், இப்படத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் என கூறப்படுகிறது. அதேசமயம், இன்றைய இளைய தலைமுறை நடிகர்ளோடு போட்டியிட்டுக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், ஏற்கனவே வேல்ஸுக்கு கால் ஷீட் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதால், சிம்பு நடிக்கவிருந்த படத்தில் ரஜினி நடிப்பதாகவும் இப்படம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவில் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து இத்தகவல் வெளியாகும் நிலையில், இப்படம் உருவானால் இது வேல்ஸ் இண்டர் நேஷனலுக்கு மட்டுமல்ல, ரஜினியின் கேரியரிலும் முக்கியப் படமாக அமையலாம் என கூறப்படுகிறது.

சிம்பு நடிக்க வேண்டிய படம் என்பதால் இதில் சிம்புவுக்கும் ஒரு மாஸ் கேரக்டர் இருக்குமாம்.

- Advertisement -spot_img

Trending News