ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக உள்ளார்.

அதிகம் படித்தவை:  வாங்குன காசுக்கு வேலை பார்த்த ஸ்டோக்ஸ் : 'ஹாட்ரிக் ’ உடன் ஸ்டைலா வெற்றி பெற்ற புனே!

 

இப்படம், இந்த ஆண்டு தீபாவளி வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை உலகத் தரத்துக்கு செய்ய வேண்டியிருப்பதால் படத்தை தீபாவளிக்கு வெளியிடாமல், அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது

அதிகம் படித்தவை:  பைனான்சியர் அன்புச்செழியனை 'பீப்' வார்த்தையால் திட்டும் பிரபல ஹீரோயின்.

 

அந்த நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 2018-ல் குடியரசு தினத்துக்கு ஒரு நாள் முன்பாக படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் தயாராவது குறிப்பிடத்தக்கது.