தனது விடாமுயற்சியால் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். ரொமோ படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அவரது கிராஃப் முன்பை விட ஏறிவிட்டது. தற்போது மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், அனிருத் இசை அமைக்கிறார்.

மோகன் ராஜாவின் முந்தைய திரைப்படமான தனி ஒருவன் மாபெரும் ஹிட்டானதால் இவரது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதுவும் சிவகார்த்திகேயன், நயன்தாரா, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரஜினி படப்பெயரான வேலைக்காரன் எனும் டைட்டிலை படக்குழு தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியை மையப்படுத்தி ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.