முத்து படம் ரஜினிக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்று தந்த படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினி விஸ்வாசமான வேலைக்காரண நடித்திருப்பார். அதில் முதலாளியாக வரும் சரத்பாபு நாட்டிய பெண்மணியான மீனாவை காதலிப்பார்.
ஆனால் மீனா ரஜினியை காதலிப்பார், இந்த படத்தில் ரஜினியை முதன்முதலாக மீனா சந்திக்கும் காட்சியின் போது ரஜினி முக்கியமான பஞ்ச் வசனம் ஒன்று பேசுவார். நாடகம் நடக்கும் வேளையில் தும்மிக்கொண்ட இருக்கும் ரஜினி மீது மீனா கோபப்பட்டு திட்டுவார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி ‘இந்த தும்மலு, விக்கலு, இரும்மலு, பணம் பதவி, நல்லது, கெட்டது, பொறப்பு, இறப்பு என இதெல்லாம் தானாக வரும். ஏன் வருதுன்ணு கேட்க முடியாது, போனாலும் ஏன் போனது என்று கேட்க முடியாது’ என்று பஞ்ச் பேசுவார். இது மிகவும் பிரபலமான பஞ்ச் வசனம் ஆகும்.
இந்நிலையில் நேற்று தொலைக்காட்சியில் முத்து திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மைக்கலா லேவி அந்த படத்தை பின்னாடி டிவியில் ஓடிக்கொண்டிருந்தபடி ரஜினின் பஞ்ச் வசனத்தை பேசியுள்ளார். இதனை ரஜினி பேன்ஸ் பக்கத்தில் அவரது ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்கள்.

தலைவர் என்றால் சும்மாவா.. இன்னைக்கு ராஜாதான் என் ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்து வருகிறார்கள்.