Connect with us
Cinemapettai

Cinemapettai

படம் போனி ஆகாததால் ரஜினி எடுத்த திடீர் முடிவு.. விட்டதைப் பிடிக்க பக்கா பிளான்!

rajinikanth-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படம் போனி ஆகாததால் ரஜினி எடுத்த திடீர் முடிவு.. விட்டதைப் பிடிக்க பக்கா பிளான்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். வயதானாலும் இவரது ஸ்டைல் குறையாத காரணத்தினால் இன்று வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கி உள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

பொதுவாக ரஜினி படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதிலும் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. மேலும், திரையரங்குகள் திறக்க தாமதமாவதால் அனைத்து படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி ஊரடங்கு காரணமாக அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியதாகவும், இதனால் இதை சரிக்கட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

annaththe-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top