ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் 2.0 இந்த திரைப்படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடித்து இருப்பார் தமிழ் சினிமாவில் 500 கோடிக்கு மேல் வசூல் ஆகிய திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் 2.0 பெற்றுள்ளது.

இன்னும் பல இடங்களில் 2.0 திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசூல் விவரம் தெரியவந்துள்ளது இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 2.0 திரைப்படம் 17 கோடிக்கு மேல் வசூலாகி முதலிடத்தில் இருக்கிறது.

அதிகம் படித்தவை:  2016 சட்டப்பேரவைத் தேர்தல்...ரஜினியின் பதில் இதுதான்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஹாலிவுட் படத்திற்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருக்கும் இந்த நிலையில் ஹாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியாத வகையில் வசூலில் 2.0 திரைப்படம் முதலிடத்தில் இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.