இந்தியாவில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. வாரத்திற்கு கிட்டத்தட்ட 100 கொள்ளையாவது நடந்து விடுகிறதாம்.
ரஜினி படத்தில் இடம் பெற்றது போலவே சில வருடங்கள் கழித்து பிரபல நகைக்கடையில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தற்போது இதனை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லிங்கா படத்தில் ரஜினிகாந்த் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து நகையை திருடுவதற்கு திட்டமிடுவார். அப்போது இவர்கள் கொள்ளையடிக்கதான் வந்திருக்கிறார்கள் என்பது தெரியாமல் கடையின் உண்மையான உரிமையாளர் கிரன் குமார் அந்த நகையை பற்றி தெளிவாக விளக்கம் கூறுவார். அப்படத்தில் காட்டியுள்ள கடைதான் லலிதா ஜுவல்லரி.

லிங்கா படத்தில் நடந்தது போலவே சில வருடங்கள் கழித்து திருச்சியில் லலிதா ஜுவல்லரி கடையில் உண்மையாகவே நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதை வைத்து பார்க்கும்போது லிங்கா படத்தில் எப்படி லலிதா ஜூவல்லரி கடையில் நகை கொள்ளையடிக்கப்பட்டதோ. அதேபோல உண்மையாகவே லலிதா ஜுவல்லரி கடையில் சில நபர்களால் நகைக்கொள்ளை அடிக்கப்பட்டது.
தற்போது இந்த இரண்டு சம்பவங்களையும் ஒன்றாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு சிலர் லிங்கா படத்தில் சொன்னது போலவே உண்மையிலும் நடந்து விட்டதே என கூறிவருகின்றனர். அதற்கு மற்ற சிலர் எம்ஜிஆர் பாடலில் “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என ஒரு படத்தில் பாடுவார்.
அந்த பாடலுக்கு ஏற்ப திருடுபவர்கள் திருந்தாவிட்டால் எந்த காலத்திலும் திருட்டை முழுவதுமாக முடிக்க முடியாது என சமூக வலைதளங்களில் ஒரு சிலர் கூறி வருகின்றனர். தற்போது வரை காவலர்களும் பல கொள்ளை சம்பவங்களை தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.