Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த நடிகைக்கு பேசியதை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுங்க.. தயாரிப்பாளருக்கு கட்டளையிட்ட ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு பேசியதை விட ஒரு மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு கட்டளை இட்டாராம். அப்படி அந்த நடிகை என்ன பண்ணி விட்டார் என்பதே பேச்சாக உள்ளது.

சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகராக வலம் வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் அதை தலைக்கு ஏற்றிக் கொள்ள மாட்டார்.

அதைப்போல் தன்னுடைய படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தால் உடனடியாக அந்த படத்தின் தயாரிப்பாளரை அழைத்து இழந்த நஷ்டத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கொடுத்து விடுவாராம். இதை பல தயாரிப்பாளர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

மேலும் ரஜினியே சில படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் படையப்பா.

இந்த படத்தில் ரஜினியை விட சிறப்பான கதாபாத்திரம் அமைந்தது ரம்யா கிருஷ்ணனுக்கு தான். நீலாம்பரி கதாபாத்திரத்தை பார்த்து மிரண்டுபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணனுக்கு பேசிய சம்பளத்தை விட ஒரு மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என கூறிவிட்டாராம்.

neelambari-padayappa

neelambari-padayappa

படையப்பா படத்தில் நான்தான் ஹீரோ என்பதை விட, நீலாம்பரியின் கதாபாத்திரம் தான் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது என எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்ததாக அந்த படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றிய தேனப்பன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top