Tamil Cinema News | சினிமா செய்திகள்
6 வருடத்திற்கு முன்பு கைவிட்ட படத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி.. மரண மாஸ்!
சினிமாவை பொறுத்தவரை வெற்றி கூட்டணிகள் என்பது பொதுவாக பார்க்கப்படும். ஏற்கனவே ஒரு கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்தால் அதை வெற்றி கூட்டணி என்பர்.
அந்த வகையில் ரஜினிகாந்துக்கு மிகப் பெரிய சூப்பர் டூப்பர் வெற்றி படங்களை கொடுத்தவர் தான் கேஎஸ் ரவிக்குமார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எப்போதுமே எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால் 2014 ஆம் ஆண்டு வெளியான லிங்கா படம் படு தோல்வியை சந்தித்ததால் அதன்பிறகு இருவரும் கூட்டு சேர வில்லை. கோச்சடையான் என்ற படத்தில் வசனம் மட்டும் எழுதி இருந்தார் கேஎஸ் ரவிக்குமார்.
இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் சமீபகாலமாக வெற்றிப் படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தெலுங்கில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சில படங்கள் இயக்கியிருந்தாலும் அனைத்தும் தோல்வி படங்களே.
இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு கைவிட்ட ராணா என்ற படத்தின் கதையை மீண்டும் கேட்டதாக அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த படம் மட்டும் அப்போதே உறுதியாக இருந்தால் இன்றைய பாகுபலி போன்ற படங்களை நாம் வியந்து பார்த்திருக்க மாட்டோம்.
அந்தளவு பிரமாண்டத்தை அப்போதைய கேஎஸ் ரவிக்குமார் செய்திருப்பார் என்கிறது சினிமா வட்டாரம்.

rana-pooja-stills
ராணா படத்தின் பூஜை போடப்பட்ட போது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
