Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர்ஸ்டார் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2.௦ படத்தில் நடித்துள்ளார், இதில் காலா படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, மேலும் காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி திரைக்கு வர இருக்கிறது இதை தொடந்து 2.0 படமும் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
2.0 படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் தாமதம் ஆகிறது. இந்த நிலையில் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது, இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிக்க உள்ளார் என கூறுகிறார்கள், மேலும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறுகிறார்கள்.
இவர் ஏற்க்கனவே ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன், சிவாஜி ஆகிய படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா ஏற்கனவே அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடிக்க இருப்பதால் தற்பொழுது ரஜினியின் படம் உறுதியானால் அவருக்கு ஒரே நேரத்த்தில் இரண்டு மிகப்பெரிய ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் பெருமையை பெறுவார், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
