fbpx
Connect with us

Cinemapettai

முதல் பாதி தளபதி! இரண்டாம் பாதி பாட்ஷா! இதுதான் ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படம்

rajini-karthik-subburaj

News | செய்திகள்

முதல் பாதி தளபதி! இரண்டாம் பாதி பாட்ஷா! இதுதான் ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படம்

லிங்கா படத்துக்குப் பிறகு தன் வழக்க மான ஃபார்முலாவில் இருந்து விலகி வயதுக்கேற்ற கதாபாத்திரம், ஹீரோயின், வித்தியாசக் கதைகள் என தன் படங்களைப் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார் ரஜினி. கபாலி, காலா படங்களைத் தொடர்ந்து 2.0 படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை படம் குறித்து எந்தத்தகவலும் வெளிவராத நிலையில், கிடைத்த தகவல்களின் எக்ஸ்க்ளூஸிவ் தொகுப்பு இது.

படத்தில் ரஜினிக்கு, கல்லூரி மாணவர்களை உத்வேகப்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தும் கேரக்டர். அமைதி வாத்தியாராக மட்டும் அல்லாமல் ஆக்ரோஷமாகவும் சண்டை போடுகிற மாதிரி அவருடைய பாத்திரம் உருவாக்கப்பட்டிக்கிறது.

கபாலிக்கும், காலாவுக்கும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்திருந்தாலும் ரஜினியின் ரசிகர்களுக்கு அது போதவில்லை. பழைய `மாஸ் ரஜினியைப் பார்க்கவே ஒவ்வொரு முறையும் காத்திருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜ் படம் அந்தக் குறையை போக்கும். இது தளபதி, பாட்ஷா ஆகிய படங்களின் க்ளாஸும் மாஸும் கலந்த கலவையாக இருக்குமாம்.

படத்தில் ரஜினி கறுப்புத்தாடியும், கோட் சூட்டுமாக கம்பீரமாகத் தோன்றவிருக்கிறார். பகலில் ரேஞ்சர் கல்லூரியின் ஹாஸ்டல் வார்டனாகவும், இரவில் அதிரடி சரவெடி டானாகவும் நடிப்பதாகத் தகவல் உலவுகிறது. கல்லூரிக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகளுடன் ரஜினி பயங்கரமாக மோதும் மூன்று சண்டைக்காட்சிகளை கம்போஸ் செய்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின்.

ஜூன் மாதம் டார்ஜிலிங் புறப்பட்ட படக்குழு அங்கே காட்டுப் பகுதியிலுள்ள ரேஞ்சர் கல்லூரியில் படப்பிடிப்பை நடத்தியது. இதற்காக சென்னையில் இருந்து 400 பேர், மும்பையில் இருந்து 200 பேர் என 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் டார்ஜிலிங் அழைத்துச் செல்லப்பட்டனர்.

rajini-karthik-subburajடார்ஜிலிங்கில் ரஜினி நடிக்கும் பாடல் காட்சி ஒன்றை, டான்ஸ் மாஸ்டர் ஷெரிஃப் வடிவமைத்து இருக்கிறார். அனேகமாக இது ஓப்பனிங் பாடலாக இருக்கலாம்.

ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இருவரும் நடிக்கும் காட்சிகளை டார்ஜிலிங்கில் படமாக்கி இருக்கின்றனர். படத்தில் ரஜினிக்கு சிம்ரன் மனைவி இல்லை. முன்னாள் காதலியாக நடிக்கிறார் என்கிறார்கள்.

வில்லன் விஜய் சேதுபதி. முதல் இரண்டு ஷெட்யூல்களிலும் அவர் இல்லை. லக்னோவில்தான் அவருடைய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. முக்கியமான கேரக்டரில் பாபி சிம்ஹா. அவரின் அப்பாவாக ஆடுகளம் நரேன். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடி.

ரஜினி 65 நாட்களுக்குமேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். பாபிசிம்ஹாவின் கால்ஷீட் படம்முழுக்க இருக்கிறது, விஜய்சேதுபதி 20 நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். டார்ஜிலிங் கல்லூரி தவிர வெளி இடத்தில் வீடு செட், டேராடூனில் ஒரு ரிசார்ட்டை சிம்ரன் வீட்டுக்கான செட்டாக மாற்றியது என வெரைட்டியான செட்களை ஆர்ட் டைரக்டர் சுரேஷ் அமைத்துத் தந்திருக்கிறார். இவர் சாபுசிரிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

டேராடூன் படப்பிடிப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 10-ம்தேதி முதல், சென்னை பூந்தமல்லியில் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. அதற்காக அங்கே மதுரையை நகலெடுத்ததுபோல் ஒரு பிரமாண்ட அரங்கை அமைத்து வருகிறார்கள். சென்னையில் அங்கு படப்பிடிப்பு முடிந்த பின்னர் லக்னோவில் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்கிறார்கள்.

ரஜினியின் ஆன்மிக அரசியல் என்ட்ரிக்கு ஏற்றவகையிலான வசனங்கள் படத்தில் இருக்கும் என்கிறார்கள். அதற்கேற்றபடி மாணவர்களுக்கு அவர் கொடுக்கிற அட்வைஸ்கள் எல்லாம் அரசியல் பன்ச்களாக இருக்குமாம்!

பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top