சூப்பர்ஸ்டார் ரஜினி தற்பொழுது காலா மற்றும் 2.௦ படத்தில் நடித்து முடித்துள்ளார் இதில் காலா படத்தின் டீசர் நேற்று இரவு ரிலீஸ் ஆனது அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், மேலும் 2.௦ படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் இன்னும் டீசர் தயாராகவில்லை.

காலா படம் வருகிற ஏப்ரம் மாதம் 27 ம் தேதி உலகெங்கும் திரைக்கு வர இருக்கிறது, இந்த படத்தை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை சன் பிக்சர் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளராக இளம் இளம் இசையமைப்பாளர் அனிருத் கமிட் ஆகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ரஜினி, கமல் திடீர் சந்திப்பு.! பின்னணி என்ன ?

மேலும் இந்த படத்தில் சுப்பர்ஸ்டாருக்கு வில்லனாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது ஆனால் அந்த கேள்வியின் சஸ்பென்ஸ் தெரியவந்துள்ளது ஆம் தற்பொழுது ரஜினிக்கு வில்லனாக நாடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  ரஜினி, சரத்குமாரை சிக்கலில் இழுத்துவிட்ட காவிரி பிரச்சனை
rajini vijaysethupathy
rajini vijaysethupathy

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் தங்களது உற்சாகத்தினை வெளிபடுத்தி வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி பீட்சா, ஜிகர்தண்ட, இறைவி,என கார்த்திக் சுப்புராஜ் முந்தைய படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.