Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-rajini-mohan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மைக் மோகனை கவிழ்க்க ரஜினி, கமல் தீட்டிய சதித்திட்டம்.. உஷாராய் சினிமாவில் பிழைத்து கொண்ட சம்பவம்

எண்பதுகளில் ரஜினி, கமல் என்ற இரண்டு ஆளுமைகள் இருந்தபோதே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து அவர்களையே மிஞ்சும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தவர்தான் மைக் மோகன்.

அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக காதல் நாயகனாக இவர் பல படங்களில் தோன்றியது இவருக்கு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்து சினிமாவில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ஒரு நடிகர் விறுவிறுவென முன்னேறி வந்தால் முன்னணி நடிகர்கள் பலருக்கும் கலக்கம் ஏற்படும். அப்படி ஒன்றுதான் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்குமே ஏற்பட்டதாக அப்போதே பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன.

மோகனின் வளர்ச்சியை பார்த்து இருவரும் ஆடிப் போய்விட்டார்களாம். இருந்தாலும் நாங்கள் முன்னணி நடிகர்கள் என்ற பெயரில் தன்னுடைய படங்களில் மோகனை இரண்டாவது கதாநாயகனாக மாற்றி நடிக்க வைத்துவிடலாம் என பலமுறை வழியே போய் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

ஆனால் மோகன் உஷாராக அந்த வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்துவிட்டு தனி ஒரு நாயகனாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தாராம். அதுவே அவர் பின்னாளில் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்து தமிழ் சினிமாவின் உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது.

இவ்வளவு ஏன் இன்றைக்கும் இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது விறுவிறுவென வளர்ந்து வரும் நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயனும் இதுபோல் பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.

mic-mohan-cinemapettai

mic-mohan-cinemapettai

Continue Reading
To Top