fbpx
Connect with us

கமலை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு! ரஜினி உதவியை நாடிய கமல்?

rajini-kamal-chandrababu-naidu

News / செய்திகள்

கமலை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு! ரஜினி உதவியை நாடிய கமல்?

சில திடீர் சந்திப்புகள் மிக பெரிய குழப்பத்தை உருவாக்கும். அப்படிதான் ரஜினி, கமல் சந்திப்பு.

கமலின் உடல் நலம் பற்றி பேசதான் ரஜினி போனார் என்பது போல சில செய்திகள் வந்தாலும், நிஜம் அதுவல்ல என்கிறது ரகசிய தகவல்கள். பின் ஏன் இந்த சந்திப்பு? மறுபடியும் கவுதமியில் இருந்துதான் இந்த பிரச்சனையை சொல்ல வேண்டியிருக்கிறது. கமலை விட்டுப் பிரிந்த கவுதமி, சும்மாயில்லாமல் பிரதமர் மோடியை சந்தித்தார் அல்லவா? அந்த சந்திப்பு அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். ஏற்கனவே பிஜேபி யில் பொறுப்பில் இருந்தவர்தான் கவுதமி. ஆனால், அந்த காலம் வேறு. இப்போது பிரதமரை சந்திப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று அவருக்கே தெரியும்.

திடீரென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழியாக பிரதமரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கினாராம் கவுதமி. அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டாலும், மிக முக்கியமான பதவி ஒன்றை தனக்கு ஏற்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டாராம் அவர். இந்திய அளவில் மிக செல்வாக்கான பதவியாக அது இருந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது வட்டாரம். இந்த பதவி அவருக்கு வந்துவிடாமல் தடுப்பதற்காகதான் ரஜினியை வரவழைத்து சந்தித்தாராம் கமல்.

எந்த சந்திரபாபு நாயுடு, கமலுக்கு எதிராக வேலை பார்த்தாரோ… அதே சந்திரபாபு நாயுடு ரஜினி சொன்னார் கேட்பாரல்லவா? அதுக்குதான் இந்த சந்திப்பு.

“ஏன் கமல் சொன்னாலும் கூடதான் கேட்பார்” என்கிறவர்கள், கமல் சொன்னாலும் கேட்கலாம் ஆனால் ரஜினி சொன்னால் மறுக்க முடியாது அல்லவா அதற்குதான் இந்த சந்திப்பு..

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top