rajini-kamal-amitabhஇசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை செய்த நிகழ்வுக்காக விஜய்டிவி அவருக்கு ஒரு பாராட்டு விழாவை சென்னையில் வரும் 27ஆம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முதலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் தற்போது சமாதானம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி மற்றும் பல முக்கிய நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் கமல்ஹாசன் மட்டும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு முன்னர் சென்னை வந்துவிட்டால் கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளாராம். மற்றவர்கள் அனைவரும் தங்கள் வருகையை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.

இவர்களுடன் தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் தமிழ் இயக்குனர்கள் மற்றும் டெக்னீஷியன்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.