ajith

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளர்களாக சேர்ந்து பின்னாளில் இயக்குனர் ஆனவர்கள் பலர். அதில் ஒருவர் தான் அழகம் பெருமாள். யார் இவர் என யோசிக்கிறீர்களா?

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாக நடித்தாரே. இப்போது தெரிந்து விட்டதா. அவரே தான். எழுத்தாளர் சுஜாதாவும் இவரும் நண்பர்களாம்.

azhagam-perumal

பிலிம் இன்ஸ்டிடியுடில் படித்து முடித்து 1989 ல் இயக்குநர் மணிரத்னத்திடம் நான் உதவி இயக்குநராக பணியாற்ற துவங்கினேன். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் திரைப்படம் தளபதி.

பணியாற்றிய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி என்று மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்த படம் அது. அப்போது ஆரம்பித்து இப்போது வரை இயக்குநர் மணிரத்தினத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறேன்.

azhagam-perumal

அவரோடு பணியாற்றியும் வருகிறேன். மணிரத்னம் சாரின் குரு படத்துக்கு நான் தான் தமிழில் வசனம் எழுதினேன். மேலும் ரோஜா, பம்பாய், கடல் போன்ற படங்களில் இடம்பெற்ற திருநெல்வேலி, நாகர்கோவில் வட்டார தமிழ் வசனங்களுக்கு நான்தான் பொறுப்பு.

அதிகம் படித்தவை:  இந்த கிண்டலுக்கு பின்னால் இருப்பது விஜய், அஜித் ரசிகர்களா, அல்லது?…

எல்லா வித கேரக்டரும் பண்ணுறேன். அப்பானா அப்பா கதாபாத்திரம், வில்லனா வில்லன், இப்படிதான் நடிப்பேன் அப்படித்தான் நடிப்பேன்னு இல்லாம எந்த கதாபத்திரத்தில் நடிச்சாலும் அதுல நம்ம விஷயத்தை சரியா பண்ணனும் என்பது என்னுடைய விருப்பம்.

 

அவர் இவருக்கு ஏழு கோட்டை வீடு என்ற பெயரில் ஒரு கதை எழுதிக்கொடுத்தாராம். பின் இதை திரைப்படத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்தாராம் பெருமாள்.

azhagam-perumal

ரஜினி, கமல் என யாரும் இக்கதை கேட்ட பின்பு ஓகே சொல்லவில்லையாம். ஆனால் அஜித் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

கதை பிடித்து போய் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தாராம். ஆனால் கடைசியில் சில சூழ்நிலைகளால் இப்படம் கைகூடவில்லை என பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் அழகம் பெருமாள்.

அதிகம் படித்தவை:  விவேகம்,மெர்சல்,தானா சேர்ந்த கூட்டம் ஆகிய மூன்று படங்களின் சாதனையை ஒரே நாளில் முறியடித்த பிரபலம்.!

தளபதி திரைப்படத்தில் தான் இவருடைய சினிமா பயணம் தொடங்கியது.

azhagam-perumal

இருவர் படத்துக்குப் பின் நான் விஜய், சிம்ரன் நடித்த உதயா படத்தை இயக்கினேன். அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹமான் இசை. பின்னர் மணிரத்னம் சார் தயாரித்த ‘டும் டும் டும்’ படத்தை இயக்கினேன்.

படம் வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்போது நடித்து வருகிறேன். மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள்.

இவ்வளவு நாள் படம் இயக்காமல் கேப் விழுந்துவிட்டது. அதற்கு எல்லாம் பதில் செல்லும் வகையில் நல்ல கதையோடு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்,” என்றார் அழகம் பெருமாள்.