புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜய், அஜித்.. இது மட்டும் நடந்தால் திருவிழா கொண்டாட்டம் தான்

தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவர்களை எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்து காண்பது அரிதிலும் அரிது. அப்படி ஒரு நிகழ்வு மட்டும் நடந்து விட்டால் அதை அவர்களுடைய ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி ஒரு விஷயம் தான் தற்போது நடைபெற இருக்கிறது. நாளை 44ஆவது ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் மிகவும் விமரிசையாக தொடங்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது தமிழக அரசின் சார்பில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அவர்கள் மட்டுமல்லாமல் திரை துறையில் பிரபலமாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆல் இந்தியா செஸ் அசோசியேஷன் மற்றும் தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை ஏற்று அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பட வேலைகளில் பிசியாக இருக்கும் அவர்கள் சில மணி நேரங்களாவது இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் டாப் ஹீரோக்கள் அனைவரும் ஒரே மேடையில் சந்திக்கப் போகும் அந்த தருணத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

அப்படி அவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் அந்த செய்தி தான் நாளை பரபரப்பாக பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மெகா நிகழ்ச்சிக்கு தற்போது அதிகபட்ச விளம்பரங்கள் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. இதுவே பொதுமக்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

- Advertisement -

Trending News