Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.! சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்
கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக நடந்து வருகிறது ஏனென்றால்சமீபத்தில் ரிலீஸ் ஆன அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் சரி, பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ,நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
இந்த நிலை நீடித்தால் ஏற்கனவே அரைச்ச மாவையே அரைக்கும் ரஜினி ,கமல், அஜித், விஜய் ஆகியவர்கள் சினிமாவில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் அப்படி நடந்தால் நான் ரொம்ப சந்தோஷப் படுவேன் என சாரு நிவேதிதா கூறியுள்ளார், இவர் எப்பொழுதும் சர்ச்சைகளை தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றுபவர், இவர் இவ்வாறு கூறியது அனைத்து ரசிகர்களையும் கோபமடைய வைத்துள்ளது.
மேலும் தனது வலைப்பக்கத்தில் இது பற்றிய கருத்தை வெளியிட்டிருக்கிறார், அவர் கூறியதாவது தமிழ் சினிமாவை கடந்த 15 வருடங்களாக திட்டித் திட்டியே நான் ஐந்து புத்தகங்கள் எழுதி விட்டேன், ஆனால் தற்போது பாராட்ட வேண்டியது எனது கடமை, சமீபத்தில் வெளியாகிய 96 பரியேறும் பெருமாள் ‘ராட்சசன்’ வடசென்னை ஆகிய திரைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன.
இதில் 96 திரைப்படம் பலர் ரசித்தார்கள் இவர்கள் இணைவார்களா மாட்டார்களா என சஸ்பென்ஸ் வைத்ததால் அனைவரும் விரும்பிப் பார்த்தார்கள், இந்த வரிசையில் வெளியாகிய மேற்கு தொடர்ச்சி திரைப்படம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அந்த திரைப்படத்தில் மக்களின் துயரத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறது என கூறினார்.
மேலும் இதுபோல் நல்ல படங்கள் தொடர்ந்து வெளியானால் பிச்சு பிச்சு போட்ட பழைய சமாச்சாரங்களை படங்களாக கொடுக்கும் ரஜினி,கமல் அஜித் விஜய் ஆகியோர்கள் இங்கு காலம் தள்ள முடியாது என கூறியுள்ளார் சாரு நிவேதிதா.
