யார் கண் பட்டதோ நம்ம தமிழ் சினிமாவுக்கு சோதனை மேல் சோதனை. ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் ஸ்டிரைக் என்று அறிவித்த பெப்ஸி தொழிலாளர் சங்கம், அதில் உறுதியாக நின்றும் விட்டது. இந்தப்பக்கம் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கமும், பார்க்கலாம் ஒரு கை என்று முடிவெடுத்துவிட்டது.

Rajinikanth Kaala

இதையடுத்து விஷாலின் துப்பறிவாளன், மற்றும் உதயநிதி, விஜய் ஆன்ட்டனி, சசிகுமார், ஆர்.கே.சுரேஷ், அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்கும் படங்களின் ஷுட்டிங் பெப்ஸி அமைப்பை சேர்ந்த ஊழியர்களின் துணையுடனே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் ஷுட்டிங் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

mersal businessஇத்தனைக்கும் “நான் தயாரிப்பாளர்கள் பக்கம்தான்” என்று அறிவித்திருந்தார் பா.ரஞ்சித். இந்த அறிவிப்புக்குப் பின் எவ்வித தயக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டிய காலா படப்பிடிப்பு ஏன் நடக்கவில்லை? ரஜினிதான் காரணமாம்

rajini politics before kaalaதொழிலாளர்களுக்கு எதிராக முடிவெடுத்தால், நாளைக்கு நான் தொழிலாளர்களின் தோழன் ஆக முடியாது. அதற்காக அவர்களின் முரட்டுப் போக்கையும், முன் கோபம் வரவழைக்கும் சம்பளங்களையும் ஒப்புக் கொள்ளவும் முடியாது. வேறு வழி? ரஜினிக்கேயுரிய சைலன்ட் வைத்தியம்தான் அரங்கேறியிருக்கிறது.