ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் கதை பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

kaala
kaala

இயக்குனர் பா.ரஞ்சித் -ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் இரண்டாவது படம் காலா. முதல் படமான கபாலிக்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்த போதிலும், சாதாரண வெற்றியே படத்திற்கு கிடைத்தது. இதை தொடர்ந்து, காலா போஸ்டர் வெளியாகியதில் இருந்து இப்படம் அரசியல் படமாக இருக்கும் என கோலிவுட் தரப்பில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு படக்குழுவே பதில் அளித்திருக்கிறது. இப்படம் அரசியல் படமெல்லாம் இல்லை. ஆனால் பார்ப்பவர்களை அரசியல் பேச வைக்கும்படியாக இருக்கும். சமகால பிரச்சனைகள் அதிகமாக இப்படத்தில் பேசப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகிய படத்தின் பாடல்கள் அதிகமாகவே சமுதாய கருத்துள்ள பாடல்களாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  ஒருவழியாக படப்பிடிப்புக்கு தயாராகியது தமிழ் திரையுலகின் 'பாகுபலி'
kaala

இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை தாரா பகுதியில் இருக்கும் 70 சதவீத தமிழர்களுக்கு சொந்தமான நிலம் இல்லை. வசிக்க வீடு இல்லை. இந்த வேளையில், மும்பை வரும் காலா(ரஜினிகாந்த்) அவர்களுக்காக களத்தில் இறங்குகிறார். அங்கு அரசியவாதியாக இருக்கும் நானா படேகருடன் மோதல் தொடங்குகிறது. மக்கள் சேர்ந்து ரஜினியை தலைவர் ஆக்குகிறார்கள். இதை தொடர்ந்து, வில்லனை வீழ்த்தி மக்களுக்கான நிலத்தை எப்படி வாங்கி கொடுத்தார் என்பதே படத்தின் மொத்த கதையாக அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அதிகம் படித்தவை:  ஜீ தமிழ் டிவி செய்த வெறி செயல்- சொல்வதெல்லாம் உண்மையால் ஒருவர் தற்கொலை

முதல்முறையாக ரஜினியின் மருமகன் தனுஷ் இப்படத்தை தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். படத்தை லைகா ப்ரோடக்‌ஷன் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ஈஸ்வரி ராவ், வத்திக்குச்சி திலீபன், ஹீமா குரோஷி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் வரும் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.