நான் யானை இல்ல குதிரை! சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை.. நெல்சனை வைத்து தலைவர் ஆடும் ஆடு புலி ஆட்டம்

Super Star Rajini: சூப்பர் ஸ்டாரின் சினிமா கேரியரிலே படு தோல்வியை சந்தித்த படம் என்றால், அது 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் தான். ரஜினிகாந்த் பாபா தோல்விக்கு பின் சற்று தொய்வில் இருந்தார்.

இருந்தாலும் தன்னால் மற்றவர்கள் பாதிக்க கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அடைந்த நஷ்டத்தை ஈடு கட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இனிமேல் படங்கள் பண்ணலாமா வேண்டாமா, ஆன்மீகம் பக்கம் சென்று விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தார்.

Also Read: 2ம் திருமணத்திற்கு அடி போட்ட ஐஸ்வர்யா.. என்னடா வாழ்க்கை இது என மாலத்தீவு கிளம்பிய ரஜினி

திடீரென பாபா படத்திற்கு ஈடாக நாம் ஏதாவது பண்ண வேண்டும் என்று சிவாஜி புரொடக்சனுக்கு கால் சீட் கொடுத்தார். சிவாஜி புரொடக்சன் பி வாசு இடம் கூறி இயக்கிய படம் தான் சந்திரமுகி. வெறும் 19 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் அப்பவே 100 கோடியை அசால்டாக வசூலித்து சாதனை படைத்தது.

அதுமட்டுமல்ல சாந்தி போன்ற பிரபலமான தியேட்டர்களில் 890 நாட்கள் வரை சலிக்காமல் ஓடியது. இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த ரஜினிகாந்த் பாபா படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு அப்புறம் தான் சந்திரமுகி படத்தில் நடிக்க வந்தார்.

Also Read: மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

இந்த இரண்டு வருட காலத்தில்தான் சினிமாவை விட்டு பின் வாங்கி விடலாமா என சூப்பர் ஸ்டார் யோசித்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் சினிமாவை போலவே அவருக்கு ஆன்மீகமும் மிகவும் பிடிக்கும், அந்தப் பாதையில் இனி சென்று விடலாமா என்றும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தான் அவருடைய ரசிகர்களை பற்றி யோசித்து, ‘நான் யானை இல்லை குதிரை’ என கூறி சந்திரமுகி படத்தில் வசூலை தாறுமாறாக குவித்து அனைவரையும் சிலிர்க்க வைத்தார். அதேபோன்றுதான் இப்பொழுது நெல்சனை வைத்து ஜெயிலர் படத்தில் மீண்டும் அதை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் நிச்சயம் தலைவரின் ஆடுபுலி ஆட்டமாக இருக்கப் போகிறது.

Also Read: எடுபடாமல் போன லியோ, பவரை காண்பித்த ஜெயிலர்.. அனிருத் பக்கம் திரும்பிய கத்தி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்