சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மேடைக்கு மேடை TVK தலைவரை சீண்டும் சீமான்.. ரஜினி வைத்து விளையாடும் ஆடு புலி ஆட்டம்

அரசியலும் சினிமாவும் வேறு வேறுதான் என்றாலும், சினிமாவில் நடிகராகவோ, இயக்குனராகவோ இருந்தால், ரசிகர்களின் கொஞ்சம் பிரபலமாகிவிட்டாலும், அரசியல் ஆசை துளிர்க்கும். இது எல்லோருக்குமே இருக்கும். ஏனென்றால் சினிமாவில் சம்பளமும், அதிகம், புகழ் வெளிச்சமும் அதிகம். ரசிகர்களும் அதிகமிருக்கும். செல்வாக்கும், மரியாதை எல்லாமே இருக்கும். அதனால் அரசியலில் வர வேண்டுமென ஆர்வமிருப்பது ஒன்றும் தவறில்லை.

ஆனால், அரசியலுக்கு வருவது, இதில் வந்துவிட்ட பின் கட்சியையும், கட்சித் தொண்டர்களையும், கட்சிச் சின்னத்தையும், தேர்தலில் வாக்குச் சதவீதத்தையும் தக்க வைப்பது ஒன்றும் லேசான காரியமில்லை. இதில் தேசிய கட்சிகளே கூட தடுமாறியுள்ளன.

இந்த நிலையில் விஜய்யின் TVK முதல் மாநாட்டுக்குப் பின் அவர் மீதான விமர்சனத்தை நாம் தமிழர் கட்சியும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதிகரித்தனர். இதற்கு தவெகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர் சமூக வலைதளத்தில்.

மோதலில் ஆரம்பித்து, ஆதரவில் முடிந்த ரஜினி – சீமான் விவகாரம்!

இதற்கிடையே சமீபத்தில், ரஜினிகாந்த் – சீமான் சந்திப்பு என்பது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேச்சு எழுந்தபோதே நாம் தமிழர் கட்சியினர் கடுமையான விமர்சித்து, தமிழர் தான் ஆட்சிக்கு வரனும் என முழங்கினர். இது ரஜினிக்கும் தெரியும், அவர் அப்போதே ரசிகர்களை அழைத்து மேடையில் பதிலடி கொடுத்தார்.

அதன்பின், இரு தரப்பினரும் எதுவும் பேசாமல் இருந்த நிலையில், இவர்களின் சந்திப்பு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இச்சந்திப்பின்போது, பாஜகவுடன் கூட்டணிக்கு தயார், ஆனால் முதல்வர் வேட்பாளர் நாம் தான் என சீமான் கேட்டுக் கொண்டதாகவும், இதுகுறித்து பாஜக தலைவர்களின் பேசுவதாக ரஜினி வாக்குக்கொடுத்ததாக ஒரு பிரபல பத்திரிக்கையில் கூறப்பட்டது.

திமுக, தவெகவை எதிர்க்க ரஜினியுடன் கூட்டணி?

இது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியாத நிலையில், விஜய்யின் முதல் மாநாட்டுக்கு முன்பு வரை அவரை என் தம்பி, என்று விட்டுக் கொடுக்காமல் பேசியவர், அதன்பின் செல்லுமிடமெல்லாம் விமர்சித்து வரும் நிலையில், திமுக, தவெகவை நாம் தமிழர் டார்க்கெட் செய்து அடித்து வருகிறது.

அடுத்த தேர்தலில், திமுக, அதிமுக, தவெக என பலமாக போட்டியிருக்கும் நிலையில் ஏற்கனவே பாஜக கூட்டணிக்கு வலைவீசி வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை கூட்டணியில் சிக்காத சிக்காத சீமான், அடுத்த முறை இந்த சவாலை எதிர்கொள்ள கூட்டணி அமைக்கலாம் எனவும், அதற்கு ரஜினியின் செல்வாக்கு வேண்டும் என்பதற்காகத்தான் சீமான் அவரை சந்தித்ததாக தகவல் வெளியாகிறது.

அரசியல் மற்றும் சினிமாவின் சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அரசியலில் சூப்பர் ஸ்டார் நான் என பேசியுள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவரும், சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய்யை சீண்டுவதற்காகவே சீமான் இப்படி பேசியிருக்கிறாரா? ஒருவேளை இருவரின் சந்திப்பின் ரஜினி தன் ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு கொடுப்பதாக கூறியதனால் சீமான் இப்படி பேசிவருகிறாரா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News