Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா? அவர் மட்டும் நடித்திருந்தால் படம் வேற லெவல்!
தமிழ் சினிமாவில் சரித்திர சாதனை படைத்த படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த தளபதி படமும் ஒன்று.
மணிரத்தினம் இயக்கத்தில் முதன்முறையாக ரஜினிகாந்த் நடித்திருந்ததால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு தந்தனர்.
படமும் எதிர்பார்த்த படியே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. ரஜினி, மம்மூட்டி, அரவிந்த் சாமி ஆகியோர் போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் தளபதி படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்க இருந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தளபதி படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்தவர் அரவிந்த்சாமி. மேலும் கலெக்டராகவும் கலக்கயிருந்தார். ஆனால் உண்மையில் முதன் முதலாக இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர் ஜெயராம்.
படத்தின் கேமராமேன் சந்தோஷ் சிவன் அரவிந்த்சாமி புகைப்படத்தை பார்த்துவிட்டு கலெக்டர் கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்று மணிரத்னத்திடம் கூறியதால் அந்த படத்தில் என்ட்ரி கொடுத்தாராம் அரவிந்த்சாமி.

thalapathy-aravind-swamy
அதன் பிறகு அரவிந்த்சாமி மற்றும் மணிரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
