அம்மா போயாச்சு… அப்புறமென்ன? தீபாவுக்கு ஒரு கட்சி. லாரன்சுக்கு ஒரு கட்சி, ஆளுக்கு ஒரு தனிக்கட்சி என்று தள்ளாட ஆரம்பித்துவிட்டது தமிழ்நாடு. “இதுதான் ரைட் டைம். பொறுத்தது போதும். பொங்கி எழுங்க” என்று அன்றாடம் ரஜினியை சந்தித்து வரும் பலரும் ஐடியா கொடுக்க…. இரும்பு மனசில் லேசாக அரசியல் துரு பிடிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

கடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக மாவட்ட நிர்வாகிகளை ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்து பேசி வரும் ரஜினி, அவர்களிடம் இப்போதைய நாட்டு நடப்பு, அரசியல் சூழல் பற்றியெல்லாம் விவாதித்து வருகிறார். இது போக, ரஜினியின் தலைமை ரசிகர் மன்றத்திலிருந்து மாவட்ட வாரியாக தீவிர ரசிகர்கள் பற்றிய கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறதாம். இதையடுத்து அலை அலையாய் சுறுசுறுப்பாக ஆரம்பித்திருக்கும் ரசிகர்கள், பழைய விட்டமின் அயர்ன் மாத்திரைகளை அள்ளி விழுங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமான செய்தி இதுதான். வருகிற மார்ச் மாதம் மாவட்ட தலைநகரங்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களை பொதுவெளியில் சந்திக்க முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி. அதற்கான வேலைகளும் இப்பவே முடுக்கிவிடப் பட்டிருப்பதாக கேள்வி.