fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஜினியிடம் வேலையை காட்டிய அமேசான்.. இந்தியா முழுவதும் ட்ரென்ட் செய்து காலி செய்த ரசிகர்கள்

rajini-amazon-movie

Tamil Nadu | தமிழ் நாடு

ரஜினியிடம் வேலையை காட்டிய அமேசான்.. இந்தியா முழுவதும் ட்ரென்ட் செய்து காலி செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தளங்களில் படம் வெளியிடுவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. பழைய திரைப்படங்களை கூட தற்போது பல டிஜிட்டல் தளங்களில் பார்க்க முடிகிறது.

அந்தவகையில் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்தை படத்தின் ப்ரொடியூசர் பி எல் தேனப்பன் மற்றும் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணாவுக்கு தெரியாமல் அப்படத்தை அமேசானுக்கு கொடுத்து விட்டார்கள் போல.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் உடனடியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை தொடர்புகொண்டு இந்த செய்தியை விவரிக்க, அவர்களும் உடனடியாக ரஜினியிடம் கூறி இந்த படத்தை பிளாக் செய்து விட்டனர்.

ரஜினியின் அப்போதைய மார்க்கெட் ரேஞ்சுக்கு மாஸ் ஹிட் அடித்த படம் படையப்பா. முதலில் ஆறுபடையப்பா என பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டதால் படையப்பா என பெயரை மாற்றி வெளியிட்டனர். படமும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது.

படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவி இடம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படத்தை வெளியிட படத்தின் புரொடியூசர் ரஜினிகாந்த் அண்ணனுக்கு மட்டுமே உரிமையுள்ளது.

இருப்பினும் திருட்டுத்தனமாக படையப்பா படத்தை டிஜிட்டல் தளங்களுக்கு விற்ற நபர்களை கண்டுபிடித்து ஆக்சன் எடுக்க ரஜினி தீவிரமாக உள்ளாராம். இந்த பிரச்சனையை ஒட்டி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் ஓடி வந்த படையப்பா படம் திடீரென நீக்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top