fbpx
Connect with us

Cinemapettai

தலைவர் ரஜினியின் 168-வது படத்தின் மற்றொரு ஹீரோயின் யார் தெரியுமா? அட! ரெண்டு பேரா?

thalaivar-168

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவர் ரஜினியின் 168-வது படத்தின் மற்றொரு ஹீரோயின் யார் தெரியுமா? அட! ரெண்டு பேரா?

தலைவர் ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை ரஜினியுடன் ஜோடி சேராத புதுமுகங்களை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என சிவா விருப்பப்படுவதாக தெரிகிறது. அதனால் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கமிட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க குடும்ப கதை அம்சத்துடன் கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என சிவா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் படம் போன பொங்கலுக்கு போட்டியாக வந்த பேட்ட படத்தை விட அதிகமாக வசூல் செய்ததால் உடனடியாக ரஜினி சிவாவிடம் தனக்கான கதையை தயார் செய்யுமாறு கூறியது நினைவுகூரத்தக்கது.

மேலும் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது. வருகின்ற பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top