Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னையில் வசூல் வேட்டையாடிய தலைவர்.. தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் தர்பார். தர்பார் படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களிலும் விடியற்காலை ஷோக்கள் போடப்பட்டன.
நேற்று காலை முதலே தமிழகமெங்கும் தர்பார் ஒலிதான் கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தர்பார் படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. இருந்தாலும் விமர்சகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது. (விமர்சனம் அப்படித்தானே பாஸ், பெரிசா எடுத்துக்க வேணா)
அந்த வகையில் சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியான தர்பார் திரைப்படம் முதல் நாள் வசூலில் சுமார் 2.27 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் முக்கிய திரையரங்கு ஒன்றில் தர்பார் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் வசூலில் சற்று அடிதான்.
முன்னதாக சென்னையை பொறுத்த வரை ரஜினி தான் முதலிடத்தில் உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O படம் 2.87 கோடி வசூல் செய்த முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விடுமுறை இருப்பதால் தர்பார் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
விடுமுறை இல்லாத நாளாக இருந்தாலும் தமிழ் நாடு முழுவதும் நேற்று அனைத்து தியேட்டர்களிலும் தர்பார் படம் ஹவுஸ்புல்லாக சென்றது குறிப்பிடத்தக்கது.
ரஜினி சாம்ராஜ்யம் தான்.!
