Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாபா படத்திற்கு பிறகு அண்ணாத்த படத்தில் மீண்டும் அந்த வேலையைச் செய்த ரஜினி.. அசந்துபோன சிறுத்தை சிவா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் அண்ணாத்த. முதன்முறையாக சிறுத்தை சிவா ரஜினி படத்தை இயக்குவதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதற்கு காரணம் ரஜினியின் பேட்ட படத்துடன் மோதிய விஸ்வாசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் உடனடியாக ரஜினி சிறுத்தை சிவாவுக்கு பட வாய்ப்பு கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணாத்த படத்தின் கதையை கேட்டுவிட்டு ரஜினி நீண்ட நாள் கழிச்சு ஒரு பக்கா கமர்சியல் படத்தில் நடிக்க இருப்பதை எண்ணி மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம்.
அந்த சந்தோசத்தில் பாபா படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி அண்ணாத்த படத்தில் சில பஞ்ச் டயலாக்குகளை எழுதி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ரஜினி தன்னுடைய கேரியரில் நடித்த முக்கிய படங்களான படையப்பா, பாபா போன்ற படங்களில் தனக்காக தானே சில பஞ்ச் டயலாக்குகளை எழுதி நடித்துள்ளார்.
அதேபோல் தற்போது மீண்டும் ரஜினி படத்திற்காக இந்த லாக்டோன் சமயத்தில் சில பஞ்ச் டயலாக்குகளை யோசித்து சிறுத்தை சிவாவுக்கு அனுப்பியுள்ளார்.
அதை பார்த்த சிறுத்தை சிவா உடனடியாக இந்த டயலாக்குகளை அவரது வசனத்தில் சேர்க்கும் வேலையில் இறங்கிவிட்டாராம். ரஜினியின் இந்த சுறுசுறுப்பை பார்க்கும் போதே தெரிகிறது, அண்ணாத்த படம் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது என்பது.
