Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் அண்ணாத்த படத்தின் மொத்த கதையும் லீக்.. இதுக்கப்புறம் படம் வந்தா என்ன? வரலைன்னா என்ன?
தமிழ் சினிமாவில் அடுத்து அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை தான். சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில்தான் சிவாவின் அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆகி அண்ணாத்த படக்குழுவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணாத்த படத்தின் கதை சுருக்கம்:-
கதைப்படி ரஜினிகாந்தின் முறை பெண்களாக வருபவர்கள்தான் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர். ரஜினிகாந்த் குஷ்புவை திருமணம் செய்து கொண்டால் மீனா கோபித்துக் கொள்வார் எனவும், மீனாவை திருமணம் செய்தால் குஷ்பு கோபித்துக் கொள்வார் என்பதற்காகவும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாராம்.
அந்தத் தம்பதியினருக்கு கீர்த்தி சுரேஷ் மகளாக பிறக்கிறார். அதேபோல் குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி மகன்கள் பிறக்கின்றனர். குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவருக்கும் தங்களுடைய மகன்களில் யாராவது ஒருவருக்கு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
இறுதியில் ரஜினியின் மகளான கீர்த்தி சுரேஷ் யாருக்கு மருமகளாக செல்கிறார் என்பதை அதிரடி கலந்த ஆக்ஷன் கதையில் உருவாக்கியுள்ளாராம் சிறுத்தை சிவா. இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் சதீஷ், சூரி போன்றோர் காமெடியன்கள் ஆக நடிக்கின்றனர்.
இந்த கதை சுருக்கத்தை வலைபேச்சு நண்பர்கள் தெரிவித்தனர். இது உண்மையா பொய்யா என்பதை படம் வெளிவந்த பின்னர் தான் தெரியும். இந்த மாதிரி கிராமத்து சப்ஜெக்டில் ரஜினிகாந்த் நடித்த நீண்ட நாட்கள் ஆவதால் இந்த படம் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உறுதி.
