fbpx
Connect with us

Cinemapettai

முருகதாஸ் செஞ்ச தப்ப சரிசெய்யும் சிறுத்தை சிவா.. இது ரஜினிக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

annaththa-siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முருகதாஸ் செஞ்ச தப்ப சரிசெய்யும் சிறுத்தை சிவா.. இது ரஜினிக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். வடசென்னையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுக்கு பாசக்கார அண்ணன் வேடத்தில் நடித்து வருகிறாராம். ஏற்கனவே ரஜினி நடிப்பில் அண்ணன் பாசத்தை மையப்படுத்தி வெளிவந்த முள்ளும் மலரும், படிக்காதவன், பாட்ஷா போன்ற படங்களின் வெற்றியைப் பற்றி தமிழ் சினிமாவுக்கே தெரியும்.

இந்நிலையில் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் சிறுத்தை சிவா படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதற்கு முன் முருகதாஸ் படத்தில் காக்கி சட்டை போட்ட விரப்பான போலீஸ்காரர் வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இதற்கு முன் காக்கி சட்டை போட்டு நடித்த ரஜினியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இல்லை.

சமீபத்தில் வெளிவந்த தர்பார் படமும் பெரிய அளவு வசூல் செய்யவில்லை என விநியோகஸ்தர்கள் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டனர். அதைப்பற்றி தயாரிப்பு நிறுவனமும் சரியான விளக்கம் தராததால் தர்பார் படம் வெற்றியா? தோல்வியா? என்பதை கணிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிட்டது. இருந்தும் சன் பிக்சர்ஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர் படங்களை தயாரிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து வருகிறது.

அந்த வகையில் கமர்சியல் கிங் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த படம் துவண்டு போன ரஜினியை தூக்கி நிறுத்தும் என நம்பலாம்.

நம்பிக்கை அதானே எல்லாம்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top