பெரும் பிரச்சனையை சந்தித்த ரஜினி படம்.. கலைப்புலி தாணுவிடம் தலைவர் வைத்த கோரிக்கை

சூப்பர் ஸ்டாரின் பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியான வெற்றி பெறும். இவர் நடிப்பில் வெளியான எந்திரன், 2.0, கபாலி, பேட்ட போன்ற படங்கள் போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லிங்கா. இப்படத்தில் அனுஷ்கா ரெட்டி, சோனாக்ஷி சின்கா, சந்தானம், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ராக்லைன் என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது. லிங்கா படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது.

இப்படம் மிக மோசமான தோல்வியை அடைந்ததால் தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்ட முடியாமல் விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டயீடு கொடுக்குமாறு ரஜினியிடம் கோரிக்கை வைத்து பிரச்சனை செய்துள்ளனர்.

இதனால் ரஜினி பெரிய சிக்கலிலிருந்து அப்செட் ஆக இருந்தார். மீண்டும் இது மாதிரியான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ஒரு யுக்தியை கையாண்டுள்ளார் ரஜினி. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி படத்தில் ரஜினி நடித்திருந்தார். இப்படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவை அழைத்து படம் லாபம் பெறவில்லை என்றால் உங்களுக்குள்ளேயே சமாளித்துக் கொள்ள வேண்டும்.

என்னிடம் வந்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என ரஜினி திட்டவட்டமாக கூறியுள்ளார். லிங்கா படத்தில் வந்த பிரச்சனையை எடுத்துக் காட்டாக கொண்டு இதே பார்முலாவை ரஜினி எல்லா படங்களிலும் தயாரிப்பாளரிடம் முன் வைக்கிறாராம்.

படத்தில் நாம் கஷ்டப்பட்டு நடித்து விடுகிறோம். ஆனால் படம் வெற்றி பெறவில்லை என்றால் அந்தப் பிரச்சினை நாமே சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. வயது முதிர்வு காரணமாக உடம்பும் ஒத்துழைக்க மாட்டேங்குது என தனக்குள்ளேயே யோசித்த ரஜினி இந்த பிரச்சனை எல்லாம் இப்படி ஒரு ஐடியா பண்ணி சமாளித்து வருகிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்