இரு நாட்களுக்கு முன்னர் நமது சினிமாபேட்டையில் ஒரு செய்தி வெளியிட்டோம் ரஜினி கடைசி படத்தை இயக்கப்போவது யார் என்று. தற்போது அது தொடர்பாக மீண்டும் ஒரு செய்தி உலா வருகிறது.

rajini

ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு தனக்கு கமர்ஷியல் சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் சினிமாவை விட்டு விலகலாம் என எண்ணி  இருந்தார் இயக்குனர் மணிகன்டன்.

Manikandan

காரணம் முதலில் தொடங்கிய கடைசி விவசாயி படம் மறுபடியும் கிடப்பில் போடப்பட்டது தான். இந்த செய்தி ரஜினி காதுக்கு போக அவர் மணிகண்டனுக்கு போன் செய்து, தான் இந்த படத்தில் நடிப்பதாகவும்.

என்னுடைய கடைசி படம் இந்த கதையை போன்று நல்ல கதையம்சம் உள்ள இறுதி படமாகவும், என்னுடைய ரசிகர்கள் நெஞ்சில் நீங்க இடம் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.

rajini

அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஏற்றது போல் கதை களத்தில் மாற்றம் செய்து வருவதாக செய்தி உலா வருகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக தகவல் வரும் வரை காத்திருப்போம்.