சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அண்ணாத்த. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் முடிந்து விட்டன.
இன்னும் மீனா மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் பத்து நாட்கள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாம். அது முடிந்ததும் மொத்த படக்குழுவும் சென்னை திரும்ப உள்ளது.
இந்த கொரானா தாக்கம் வந்ததிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்ணாத்த படத்தில் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேலும் இதுவரை ரஜினிகாந்தை இப்படி பார்த்ததே இல்லை எனவும் கூறுகின்றனர். அண்ணாத்த படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் ரஜினி படக்குழுவினருடன் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தாராம்.
அப்போது இன்னும் ஓரிரு படங்களில் நடிக்கலாம் என இருப்பதாகவும், ஆனால் உடம்பு ஒத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். இனிமேல் சினிமாவில் நான் இருப்பேனா என்பது தெரியாது, ஆனால் அனைவரும் தங்களுடைய குடும்பத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மிகவும் மனமுருகி குறிப்பிட்டதாக அண்ணாத்த படத்திலிருந்து செய்திகள் வந்துள்ளன.
ரஜினியின் சினிமா கேரியரில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட படமாகவும் மாறியுள்ளது அண்ணாத்த திரைப்படம். அதுமட்டுமில்லாமல் அண்ணாத்த திரைப்படம் தன் வாழ்நாளில் மிக முக்கியமான திரைப்படம் எனவும் சிறுத்தை சிவாவிடம் கூறினாராம் ரஜினி.