Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
சமீபத்தில் வெளிவந்த பாகுபலி படம் தன்னை இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே பிரபலாமாகிவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார். “முதலில் ரஜினிக்கு வில்லியாக நடிக்கவே பயமாக இருந்தது. நீலாம்பரியாக வேறு யாரையாவது நடிக்கவையுங்கள் எனக்கு சௌந்தர்யா நடித்த ரோல் கொடுங்கள் என்று கூட கேட்டேன். இறுதியாக வேறு வழியில்லை என்பதால் நீலாம்பரியாக நடித்தேன்.”
“ரிலீஸின்போது சென்னையில் இருக்காதே என்று கூட பலர் பயமுறுத்தினார்கள். படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனில் என் முகத்தின் மீது செருப்பை வீசியதாக என் சகோதரி பார்த்துவிட்டு சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என கூறியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
