Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-sun-pictures

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன் பிக்சர்ஸ் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்.. கெட்டவார்த்தையில் திட்டும் அளவுக்கு என்ன ஆச்சு!

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். அவர்களால் மட்டும் தான் இப்படி ஒரு விஷயத்தைச் செய்ய முடியும்.

ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் திருச்சிற்றம்பலம், விஜய் சேதுபதியின் வது படம் என அவர்கள் தயாரிப்பில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

இந்த அனைத்து படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்து வருவது தான் ஆச்சரியம். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் நினைத்தபடி சில காட்சிகள் வராததால் தற்போது மேலும் சில நாட்கள் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா வட இந்தியாவில் நடத்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் புதிய வில்லனாக விஜய்யின் வேலாயுதம், தலைவா போன்ற படங்களில் நடித்த அபிமன்யு சிங் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகவலை வெளியிட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சிறுத்தை சிவாவின் பிறந்த நாள் வந்த நிலையில் அவரது பிறந்தநாளுக்கு அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் புதிய வில்லன் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட, செம கடுப்பான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை காதுகள் கருகும் அளவுக்கு கெட்ட வார்த்தையில் திட்டி வருகின்றனர்.

annaatthe-cinemapettai

annaatthe-cinemapettai

Continue Reading
To Top