தமிழ் சினிமாவை அரசியலையும் எப்போதும் பிரிக்க முடியாது. ஆனால், அதை ஒன்று சேர்த்ததே மக்கள் தான், பிழையை நம் மீது வைத்துக்கொண்டு நடிகர்களை மட்டும் திட்டுவந்தில் எந்த நியாயமும் இல்லை, எப்போது பார்த்தாலும் ரஜினி தமிழக மக்களுக்கு ஏதும் செய்யவில்லை, வெள்ளத்தில் உதவி செய்யவில்லை என கூறிக்கொண்டு, திருட்டு விசிடியை ஆதரவு தருகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் சினிமா ரசிகர் ஒருவர் தன் பேஸ்புக் பக்கத்தில் சூப்பர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இதோ ‘கபாலி’ படத்தை திருட்டு விசிடியில் தான் பார்ப்பேன்னு நிறைய பேர் சூடம் அடிச்சு சத்தியம் பண்ணிருக்குறதை பார்த்தேன். இந்த ‘பொங்கல்’ அவர்களுக்கு சமர்ப்பணம்… தான் நடிக்குற படங்கள்ல தன் சொத்தையெல்லாம் வித்து மக்களுக்கு கொடுக்குற மாதிரி நடிக்கிறார்.

ஆனால், நிஜத்துல ஒன்னும் பண்ணாம ஏமாத்துறார்’னு கதறுறவய்ங்களை பார்த்தால் எனக்கு பாவமா இருக்கு. உங்க லாஜிக் படி பார்த்தால் நாட்டுக்குள்ளே நடக்குற தீவிரவாத சம்பவங்களுக்கு விஜயகாந்தையும், அர்ஜுனையும் தான நீங்க காலரை பிடிச்சு கேட்கனும்… அடுத்து ரஜினிகாந்த் எதுக்குய்யா அவர் சொத்தை வித்து நமக்கு தரணும்? உனக்கு வேணும்னா நீ உழைச்சு சாப்பிடு. ரஜினிகாந்த் முறையா வரி கட்டலைனா சண்டை போடு, அவரை திட்டு அதில் ஒரு நியாயம் இருக்கு.

மக்களுக்கு தானமா ஏதும் செய்யலேனு கப்பித்தனமா பேசக்கூடாது. ஏன்னா, முதல் நாள் தட்டுல பத்து ரூபாய் போட்டதுக்கு ‘நீ நல்லாருக்கனும் ராசா’னு ஆசீர்வாதம் பண்ண கிழவி. மறுநாளே காசு போடாததுக்கு ‘நாசமா போக…’னு என்னை சபிச்சுட்டு போனதெல்லாம் நிறைய பார்த்துருக்கேன்.

அப்புறமா சென்னை வெள்ளத்துக்கு அவர் ஒரு உதவியும் செய்யலை, அதனால் அவர் படத்தை திருட்டு விசிடியில் தான் பார்ப்பேன்னு அலறும் ஆஃபாயில்களே… ஏரியை திறந்துவிட்டு விடிகாலையில் துண்டை காணோம் துணியை காணோம்னு நம்மளை ஓடவிட்டய்வங்களை, யாரோ தானம் பண்ண பொருளில் தன் புகழ் பரப்ப ஸ்டிக்கர் ஓட்டுனவய்ங்க்ளை கேள்வி கேட்க வக்கில்ல… ‘மாற்றம் வேணும்… மாற்றம் வேணும்…’னு தேர்தல் அன்னைக்கும் வீட்ல உட்கார்ந்து மீம்ஸ் போட்டுட்டு ஓட்டுப் போடாம விட்ட நீங்களாம் இப்படி பேசுறதில் நியாயம் இருக்கா? உங்க லாஜிக்படியே பார்த்தாலும் அரண்மனை – 2வையும், ஜில் ஜங் ஜக் படத்தையும் நீங்க 500 நாட்கள் ஓட வெச்சுருக்கனுமே… ஏன் பண்ணல? சித்தார்த்தான் ஏகப்பட்ட உதவி பண்ணாரே… எல்லோத்துக்கும் மேல,

மனசுக்குள்ள ரஜினியை பார்த்தால் அவ்வளவு கோபம் கொப்பளிக்குதுன்னா… திருட்டு விசிடியில் கூட படத்தைப் பார்க்காத… இல்ல படம் பார்க்கனும் போல இருக்கு. ஆனால், தியேட்டரில் பார்க்க மாட்டேன்னு (சந்துருனு ஒரு மானஸ்தன் இருந்தானே மொமண்ட் ) சொன்னால், உன் சொந்த டேட்டாவை செலவு பண்ணிப் பாரு… அதிலேயும் எவனோ ஒருத்தன் தான் டேட்டாவை செலவு பண்ணி டவுன்லோடு பண்ணதை நோகாம வாங்கி உட்கார்ந்து பார்க்காத… ஊருக்குள்ள எவ்வளவோ பிரச்னை நடந்துட்டு இருக்கு. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமானு கேட்குறவங்களுக்கு, நானும் அதைத்தான் சொல்றேன். ஊருக்குள்ள எவ்வளவோ பிரச்னை நடந்துட்டு இருக்கு. ஆனால், அதை விட்டுட்டு ஒரு திருட்டு வீடியோ சைட்டை டிரெண்ட் அடிக்க வைக்குறாய்ங்க. அதை நினைச்சால்தான் கடுப்பா இருக்கு. அங்க அடிச்சவனை திருப்பி அடிக்க வக்கு இல்ல,

இங்க வந்து அப்ராணி, சப்ராணியை பிடிச்சு அடிச்சுகிட்டு. இவிய்ங்களை எல்லாம் வெச்சுகிட்டு ஆணி கூட பிடுங்க முடியாது. நன்றி வணக்கம்… பி.கு : கபாலி பட மேட்டரில் இந்த கப்பிதனமான கருத்துக்களை கிளப்பிவிட்டதே ‘பாடல் வரிகள்’ கேட்டு காண்டான க்ரூப்பா தான் இருப்பாய்ங்கனு தோணுது…!’ என்று அவர் தெரிவித்துள்ளார்.